[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

தமிழகத்திற்கு கர்நாடகா நீர்திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

cauvery-case-supreme-court-ordered-to-release-water-to-tamil-nadu

‌காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில், மறு உத்தரவு வரும் வரை கர்நாடகா அரசு தமிழகத்திற்கு ஏற்கனவே பிறப்பித்தப்படி 2,000 கனஅடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த 5–ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இடைக்கால ஏற்பாடாக தமிழகத்துக்கு 7–ஆம் தேதியில் இருந்து 18–ஆம் தேதி வரை தினமும் 2,000 கனஅடி தண்ணீரை கர்நாடகம் அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே கூறியபடி தமிழகத்துக்கு தினமும் 2,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜி.எஸ். ஜா தலைமையிலான காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அறித்த அறிக்கையில் ஆட்சேபம் எதுவும் இருப்பின் அதை வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாமல் இரு மாநில அரசுகளும் கண்டிப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணை நாளை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதாடியது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக மாநில அரசுகள் முறையிட முடியாது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close