[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

russia-president-meets-prime-minister-narendra-modi

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு கோவாவில் இன்று தொடங்குகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்துள்ளார். அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் சி‌ ஜிங்பிங், பிரேசில் அதிபர் டெமர் உள்ளிட்டோரும் கோவா வந்து சேர்ந்துள்ளனர்.

இம்மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்‌பாகவும் வர்த்தகத்தை பெருக்குவது தொடர்பாகவும் பேசப்பட உள்ளது. மேலும் பயங்கரவாதத்தை ஒடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இம்மாநாட்டில் இந்தியா பேசும் எனத் தெரிகிறது.

இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கோவா மாநாட்டில் பங்கேற்க சர்வதேச தலைவர்கள் வந்துள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close