[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

அரசு மருத்துவமனைகளில் சலூன் அவசியம்..! கர்நாடக அரசு உத்தரவு

karnataka-govt-introduced-haircut-shop-in-all-gov-hospital

கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனை வளாகங்களில் சலூன் அவசியம் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் அடர்ந்த தலைமுடி, தாடி, மீசையுடன் காணப்படுகின்றனர். இது நோயாளிகளின் தன்னம்பிக்கையை குறைப்பதாகவும் தான் நோயாளி என்பதை உணர்த்துவதாகவும் எதிர் மனப்பான்மை எழுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நோயாளிகளின் முடிகளை திருத்தி, தாடியை ஷேவ் செய்வதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் என அரசு மருத்துவமனை வளாகங்களில் சலூன்களை திறக்க முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவின்படி, அனைத்து மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் மாநில சுகாதார அமைச்சர் மகேஷ் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். நோயாளிக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இந்தத்திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதற்கட்டமாக தாலுகா மருத்துவமனைகளில் இந்த திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்து அதன்பின் படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்திட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close