[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டு மோகம்...இரவில் தடை செய்ய சீனா திட்டம்

china-plans-midnight-internet-ban-to-combat-gaming-addiction-among-kids

சிறுவர்களிடையே ஆன்லைன் மோகத்தைக் குறைக்கும் நோக்கில் நடுநிசிக்குப் பிறகு இணையதள விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க சீன அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

சீனாவில் சுமார் 75 கோடி பேர் இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இணையதளத்தை பொழுதுபோக்கு சேவைகளுக்கும், ஆன்லைன் விளையாட்டுகளுக்குமே பயன்படுத்துவதாக ஆய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றது. இவர்களில் 23 சதவீதம் பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் சீன இணையதள பயன்பாடு குறித்த அரசின் தகவலறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தால், 18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை இணையதள விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்கள் தடை செய்ய வேண்டி வரும். இந்த சட்ட நடைமுறை குறித்து இம்மாத இறுதிவரை மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. அதன்பின்னர், இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன அரசின் இந்த முடிவிற்கு இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close