[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

ராணுவ தாக்குதல் விவகாரம்: அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

pm-narendra-modi-warns-ministers-against-chest-thumping-on-surgical-strikes

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவ தலைமையகத்தின் மீது கடந்த மாதம் 18-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதிகளை அழித்து இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லையில் ‘சர்ஜிக்கல் அட்டாக்’ நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்ததுடன் சுமார் 40க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று குவித்தனர். எதிரியின் மண்ணுக்குள் நுழைந்து இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தியதை நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் நிருபம், திக் விஜய் சிங் உள்ளிட்ட சில தலைவர்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘சர்ஜிக்கல் அட்டாக் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் சந்தேகங்கள் எழுப்புகின்றன. எனவே, மத்திய அரசு ஆதாரத்தை வெளியிட வேண்டும்’ என்றார்.

இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘கெஜ்ரிவால் இந்திய ராணுவத்தை நம்புகிறாரா? அல்லது பாகிஸ்தான் அரசை நம்புகிறாரா? ஒரு மாநிலத்தின் முதல்வர் இவ்வாறு பேசுவது துரதிருஷ்டவசமானது’ என்று கூறியிருந்தார். இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில், ‘இப்படி ஒரு தாக்குதல் நடைபெறவே இல்லை என்று சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் ஒரு பொய்யை கூறி, இந்தியாவை அவமதித்து வருகிறது. அதை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்’ என்று தெரிவித்தார்.;

இதனிடையே அமைச்சர் வெங்கய்ய நாயுடு இதுபற்றி பேசுகையில் ‘ஒருசில அரசியல் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய வீரர்களின் துணிச்சலான தியாகமிக்க தாக்குதலை அவமதிக்கும் வகையில் அவர்கள் பேசுகின்றனர். பாகிஸ்தானியர்களை போல பேசும் தலைவர்கள் தங்களது பேச்சு எத்தனை பொறுப்பற்ற ஒன்று என்பதை உணர்வதில்லை’ என்றார்.

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் அட்டாக் குறித்து அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள், எதிர்க்கட்சிகளுடன் கருத்து மோதலில் ஈடுபடுவதை, பிரதமர் மோடி விரும்பவில்லை. இதனால் சர்ஜிக்கல் அட்டாக் பற்றி ராணுவம் தவிர யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அமைச்சர்கள், பாஜக தலைவர்களை பிரதமர் மோடி எச்சரித்துள்ளாராம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close