[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

காவிரி விவகாரம்: நாளை கர்நாடகா சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்

cauvery-issue-tomorrow-special-assembly-meeting-in-karnataka

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு கீழ்படிய மறுக்கும் கர்நாடக அரசு அதுதொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளது.

கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம், அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் உச்சநீதிமன்ற உத்த‌ரவை செயல்படுத்தக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காவிரி வழக்கில் செப்டெம்பர் 20, 27, 30 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது,

காவிரி மேலாண்மை வாரியத்திற்கான பிரதிநிதியை முன்மொழியவும் கர்நாடக அரசு மறுத்துவிட்டது. காவிரியில் தமிழகத்திற்கு அக்டோபர் ஒன்று முதல் 6-ம் தேதி வரை வினாடிக‌கு 6 ஆயிரம் கன அடி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவுபடி காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடாவிட்டால் நீதிமன்றத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என கடந்த விசாரணையின் போது உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திற்கு கீழ்படியாமல் இருக்கிறது.

ஆகையால், வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ள காவிரி வழக்கு விசாரணையின் போது கர்நாடகாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close