[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி

ragul-ganthi-thanks-to-modi

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி அதிகாலை காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் உயிரிழந்தனர்.

உரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, கடந்த புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தகர்த்தழித்தது. இதில் பாகிஸ்தானின் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் மத்தியிலும், அனைத்து கட்சியினரும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே பிரதமர் மோடியின் நடவடிக்கையை சாடி வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் இந்த முறை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், மோடி ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் இதுவே மிகச் சிறந்த நடவடிக்கை. நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன். ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எனது கட்சியும் நானும் ஆதரவாக இருப்போம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close