[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கும்: ராணுவத் தாக்குதலுக்கு சோனியா பாராட்டு

sonia-gandhi-hails-surgical-strikes-by-army-says-congress-supports-govt-s-stand

நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ராணுவத்தின் இந்த பதிலடிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதன்மூலம் நமது நாட்டுக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதாகவும் சோனியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனியாவிடம், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளித்தார். ராணுவத்தின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close