[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

மல்லையா மீது வங்கிகள் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

sc-to-hear-banks-plea-against-defaulting-vijay-mallya

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர உத்தரவிடக் கோரி வங்கிகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

சுமார் 9‌ ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்து விட்டு லண்டன் தப்பிச் சென்று விட்ட, கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

கடன் பாக்கியை செலுத்த உத்தரவிடவும் வங்கிகள் தங்கள் மனுவில் கேட்டுள்ளன. இதற்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மல்லையாவின் இருப்பிடம் பற்றி மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அவர் லண்டனில் இருப்பதாகவும், இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.

இந்த நிலையில், இன்றைய விசாரணையில் மல்லையா தொடர்பாக அரசுக்கு‌ நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close