[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

காவிரி பிரச்னைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நிரந்தர தீர்வு: மத்திய நதிநீர் ஆணையத் தலைவர் தகவல்

cauvery-water-management-board-ideal-solution-to-settle-cauvery-water-conflict-says-cwc-chief

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி காவரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நதிநீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தெரிவித்துள்ளார். மேலும் காவிரி பிரச்னைக்கு அதுதான் தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் அசோசம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜி.எஸ்.ஜா. பேசியதாவது: கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதிகளுடன் காவிரி நீர் மேலாண்மை வாரியம் 4 வாரத்தில் அமைக்கப்படும். தண்ணீரை சுமூகமாக பயன்படுத்துவதற்குரிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நாம் நீர் சேமிப்பை உருவாக்கவும்.அதன்பின்னர் தேவைக்கேற்ப நீரை திறந்துவிடாத வரையில், நாம் பாதுகாப்பை கொண்டுவருவது பற்றி சிந்திக்க முடியாது என்றார். மேலும் விவசாயிகளுக்கு தண்ணீர் துறையில் போதிய நன்மைகள் கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close