பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக நிலவிய பதற்றமான சூழல் தணிந்து படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது.
வன்முறைகளைத் தடுக்க பெங்களூருவில் உள்ள 16 காவல் நிலைய பகுதிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. வாகனங்கள் வழக்கம் போல் ஓடத் தொடங்கியுள்ளன.கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவையும் திறக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகளும் தொடங்கின. வன்முறைகள் நடைபெற்ற பகுதிகளை மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா பார்வையிட்டார். முற்றிலும் இயல்பு நிலை திரும்பியவுடன் 144 தடை உத்தரவையும் படைகளையும் வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு
ரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்
எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி