[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

டெல்லியில் சிக்குன்குனியாவால் 5 பேர் உயிரிழப்பு

5-chikungunya-deaths-in-delhi

டெல்லியில் சிக்குன்குனியாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் 40 ஆயிரம் பேர் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ள‌தாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். இந்த நோய்களை ஒழிப்பதில் மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்குவால் நாடு முழுவதும் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 ஆயிரத்து 879 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக நட்டா தெரிவித்தார். ‌மேற்குவங்கம், ஒடிஷா, கேரளா மாநிலங்களில் தலா 5 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

டெங்கு, சிக்குன் குனியாவை ஒழிப்பதில் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று நட்டா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close