[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

எலக்ட்ரிக் ஷாக் துப்பாக்கியை தன்மீது செலுத்தி பரிசோதித்த காவல் உயரதிகாரி!!

electric-shock-gun-testing

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கொள்ளையர்களை பிடிக்க பயன்படும் எலக்ட்ரிக் ஷாக் துப்பாக்கியை தன் மீதே பரிசோதித்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பாராட்டை பெற்றுள்ளது.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, தன்னைப் போலவே அனைவரும் மனிதர்களே, எமவே, பிறரிடம் சோதனை செய்ய உத்தரவிடாமல் தானே அதனை பரிசோதித்து பார்த்ததாக கூறினார்.

முன்னதாக, எலக்ட்ரிக் ஷாக் துப்பாக்கியை தன்மீது எறிந்து பரிசோதிக்க ஜாவீத் அகமது என்ற அந்த காவல் துறை உயரதிகாரி உத்தரவிட்டார். அதன் படி, சக காவலர்கள், அவரை பிடித்துக்கொள்ள, பின்புறத்திலிருந்து ஒரு காவலர்கள் அவரை நோக்கி எலக்ட்ரிக் ஷாக் இயந்திரத்தால் சுட்டார்.

அதில், நிலை குலைந்து கிழே விழுந்த ஜாவீத் அகமது சிறிது நேரம் கழித்து காவலர்கள் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். கொலை கொள்ளை செயல்களில் ஈடுபட்டு தப்பியோடும் கொள்ளையர்கள் மீது இந்த இயந்திரத்தால் சுட்டால் அவர்களை காயமின்றியும், உயிருக்கு ஆபத்து நேராமலும் உயிருடன் பிடிக்க முடியும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close