[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

வெளிநாடுகளுக்கு செல்லும் கருப்புப் பணம்..தகவல்களை பகிர ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு

reserve-bank-of-india

வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்லும் பணம் குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி பிற அரசு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கருப்புப்பண ஆய்வில் ஈடுபட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவர் எம்.பி.ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தகவல் பகிர்வுகள் இருந்தால் மட்டுமே கருப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த இயலும் என்றும் அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் சட்ட விரோத பணங்களை கண்காணிக்க பிரத்யேக நடைமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம் உருவாவதை தடுப்பதற்கான வழிமுறைகளை கூற உச்ச நீதிமன்றம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.பி.ஷா -வை உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close