[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

“மீதமாகும் உணவுகளை ஏழைகளுக்கு வழங்குங்கள்” : மத்திய சுகாதாரத்துறை‌ ஹோட்டல்களுக்கு வேண்டுகோள்

the-union-health-ministry-has-requested-and-suggest-donating-excess-food-has-provide-to-the-poor

ஹோட்டல்களில் மீதமாகும் உணவுகளை உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு வழங்குமாறு ‌மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுகளில் 40 சதவிகிதம் வீணடிக்கப்படுவதாக ஐநாவின் புள்ளி விவரங்கள்‌ கூறுகின்ற‌ன. இவை உணவு தானியங்களை அறுவடை செய்வதில் தொடங்கி சமைக்கும் வரை வீணடிக்கப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது. திருமண மண்டபங்கள், நிகழ்ச்சிகள்,ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில்தான் அதிகமாக உணவுகள் வீணடிக்கப்படுகிறது. இவற்றை தவிர்க்க உணவு உரிமை என்ற விழிப்புணர்வு பரப்புரையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கியுள்ளார்.

Image result for உணவின்றி தவிக்கும் ஏழை

இந்நிலையில் ஹோட்டல்களில் மீதமாகும் உணவுகளை உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு வழங்குமாறு ‌மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மீதமான உணவுகளை வீணடிக்காமல் அருகிலுள்ள ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உணவு விடுதிகளில் உள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களிட‌ம் உணவுகளை வீணடிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றுங்கள் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close