[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

சர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் - தர்மேந்திர பிரதான்

oil-prices-will-ease-if-global-tensions-do-not-rise-dharmendra-pradhan

சர்வதேச பதட்ட நிலை ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கச்சா எண்ணெய் விலை சில டாலர்கள் குறைந்துள்ளதாக கூறினார். இதைத்தொடர்ந்து சர்வதேச அளவிலான பதற்ற நிலை ஏற்படாமல் இருந்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையும் என தெரிவித்தார். 

முன்னதாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஒரு வாரமாக தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. சென்னையை பொறுத்த வரையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 31 காசுகள் விலை உயர்ந்து 76 ரூபாய் 83 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 20 காசுகள் விலை அதிகரித்து 70 ரூபாய் ‌76 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

7 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 98 காசுகளும், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 61 காசுகளும் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதே இவற்றின் விலை உயரக் காரணமாக அமைந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close