[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பழைய தங்கத்தை விற்பனை செய்வது அதிகரிப்பு

old-gold-sale-increased

தங்கத்தின் விலை தொடர்ந்து அதி‌கரித்து வரும் நிலையில், பழைய தங்கத்தை விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர், ஈரான் மேற்கத்திய நாடுகள் இடையிலான மோதல் காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த சூழலில், மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. இந்த காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கிட்டத்தட்ட 13 சதவிகிதம் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதைப் பயன்படுத்தி கொண்டு பழைய நகைகளை விற்கும் போக்கு அதிகரித்திருப்பதாக மும்பையை சேர்ந்த தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பழைய நகைகளை விற்பது ஓராண்டில் 10 முதல்15 ‌சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே, பழைய நகைகளை விற்று லாபம் காணும் போக்கு மக்களிடையே அதிகரித்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close