[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

இன்றாவது குறைந்ததே தங்கத்தின் விலை.. வாடிக்கையாளர்கள் நிம்மதி

gold-price-decreased

தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

கடந்த 17-ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,132-க்கும், ஒரு சவரன் ரூ.25,056-க்கும் விற்பனை ஆனது. ஆனால் ஜனவரி 22-ஆம் தேதி அதாவது வெறும் ஐந்து நாட்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஆயிரம் ரூபாய் அதிகரித்து ரூ.26,072-க்கு விற்பனை ஆனது. அதன்பிறகாவது தங்கத்தின் விலை குறையுமா எனக் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது தங்கத்தின் தொடர் விலையேற்றம்.

நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.26,424 ஆகும். அதாவது ஒரு வாரத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1,500 ரூபாய் அதிகரித்திருந்தது.

அட இதையும் படிக்கலாம்.. பயணிகளை தாக்கியதாக புகார் ! கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து

இந்நிலையில் தொடர் ஏற்றம் கண்டுவந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி, 22 ‌காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 42 ரூபாய் விலை குறைந்து 3, 261 ‌ரூபாய்க்கும், ஒரு‌ சவரன் 336 ரூபாய் விலை சரிந்து 26‌,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 50 காசுகள் விலை குறைந்து 40 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஒருவழியாக இன்று குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close