[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

வரிக் குறைப்பால் தேக்க நிலையில் இருக்கும் வீடுகள் விற்கும் - கட்டுமானத்துறை நிறுவனங்கள்

gst-cut-on-housing-sales-revolutionary-step-says-experts

வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்திருப்பதால் தேக்கநிலையில் இருந்த சுமார்  6 லட்சம் வீடுகள் விற்க வாய்ப்புள்ளதாக கட்டுமானத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதே வாங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

அத்துடன் மலிவு விலை குடியிருப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 8 சதவீத ஜி.எஸ்.டி. வரி ஒரு சதவீதமாக குறைப்பட உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த வரிக் குறைப்புக்கு கட்டுமானத்துறை நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்டுமானத்துறை நிறுவனங்கள், வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை என்று பாராட்டு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நடவடிக்கையால் விற்காமல் தேக்கநிலையில் இருந்த சுமார்  6 லட்சம் வீடுகள் விற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வரிக்குறைப்பு மூலம் பலருடைய சொந்தவீடு கனவு நனவாகும் என்றும் தெரிவித்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close