[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

ஹீரோ ஆகிறாரா விராத் கோலி? வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு!

virat-kohli-to-make-his-acting-debut-this-september

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி. இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அனுஷ்காவும் விராத் கோலியும் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்தும் விளம்பரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் அனுஷ்காவைத் தொடர்ந்து விராத் கோலியும் சினிமாவுக்கு வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆக்ரோஷமான ஆக்‌ஷன் மூடில் விராத் கோலி சூப்பர் ஹீரோவாக வருவதுபோலவும் பின்னணியில் கார்கள் மோதி நிற்பது போலவும் உள்ளன. போஸ்டருக்கு கீழே, ’பத்து வருடத்துக்குப் பிறகு இன்னொரு அறிமுகம். காத்திருக்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் விராத் கோலி.

அறிமுகம் விராத் கோலி என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த போஸ்டரில் ’டிரைலர்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். கீழே கேப்ஷனாக, தி மூவி என்று குறிப்பிட்டுள்ளனர். வரும் 28 ஆம் தேதி இது வெளியாகிறது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் இது திரைப்படம் பற்றிய அறிவிப்பாக இருக்குமா அல்லது விளம்பரத்துக்கான போஸ்டரா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close