[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

தீபாவளிக்குள் தங்க‌ம் விலை சவரனுக்கு ரூ.2,500 வரை உயர வாய்ப்பு

gold-rally-continues-for-fourth-day-prices-jump

வரும் தீபாவளிக்குள் இந்தியாவில் தங்கம் விலை சவரனுக்கு 2,500 ரூபாய் வரை உயரக்கூடும் என பொருட்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதும் சர்வதேச அரசியல் சூழல்களும் தங்கம் விலை உயர காரணமாக இருக்கும் என காம்டிரெண்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கணித்துள்ளார். மற்ற நிபுணர்களும் தீபாவளிக்குள் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் உயர்ந்து வந்தாலும் முதலீட்டாளர்களுக்கு அவற்றின் மீது நம்பிக்கை இல்லை என்பது தற்போது தங்கம் விலை நிலவரத்தை பார்க்கும் போது தெரியவருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பருவமழை நன்றாக பெய்யும் என்று கணிப்புகள் இருப்பதால் கிராமப்புற வருவாய் உயர்ந்து தங்கத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொருட்சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close