[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சமூகநீதியை தடுக்கவே நீட் தேர்வை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
 • BREAKING-NEWS அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை: அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
 • BREAKING-NEWS ’விவேகம்’ பாடல் காட்சிகள் இணையத்தில்‌ லீக்!
 • BREAKING-NEWS தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் வளர்ச்சி விண்ணை முட்டும் வகையில் இருக்கும்: செங்கோட்டையன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசுவிடுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS விவேகம் படம் வெளியான நிலையில் அஜித் மற்றும் படக்குழுவினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
 • BREAKING-NEWS ரூ.2000 நோட்டுகளுக்கு தடையா?
 • BREAKING-NEWS ஜீவசமாதிக்காக 7வது நாளாக நளினி கணவர் முருகன் உண்ணாவிரதமும், மவுன விரதமும் மேற்கொண்டுள்ளார்
 • BREAKING-NEWS ரிசார்ட்டில் உள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க டிடிவி தினகரன் இன்று புதுச்சேரி செல்கிறார்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,309 கன அடியில் இருந்து 3,534 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனோகரன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
 • BREAKING-NEWS மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்
வணிகம் 29 Jun, 2017 07:22 PM

அரைக் கோடி ரூபாய் விலை: அறிமுகமானது பிஎம்டபிள்யூவின் புதிய கார்கள்

bmw-introduces-new-cars

மெர்சிடஸ் பென்ஸின் எல்டபிள்யூபி மற்றும் வால்வோ எஸ்90 ஆகியவற்றிற்கு போட்டியாக பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ரக புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூபாய் 49.90 லட்சத்திலிருந்து ரூபாய் 61.30 லட்சமாக உள்ளது. இக்காரின் விநியோகம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஒரு மாடலாகும். இது 7-வது தலைமுறை 5 சீரிஸ் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த 2010-ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ரக காரை முதல் முறையாக அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதுவரை 66,000 கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்துள்ளது. இதில் 30 சதவிகிதம் அதாவது 19,000 கார்கள் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ரக கார்கள் தான்.

2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் புதிய கிளஸ்டர் ஆர்க்கிடெக்சர் அடிப்படையிலான டிசைனில் தயாரிக்கப்பட்டுள்ளது.  7 சிரீஸ் கார்கள் தான் முதன்முறையாக கிளஸ்ர் ஆர்க்கிடெக்சர் டிசைனில் தயாரிக்கப்பட்டது. தற்போது இரண்டவாது முறையாக, இந்த டிசைன் அடிப்படையில் 5 சீரிஸ் ரக கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய 5 சிரீஸ் ரக கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இரு வகை என்ஜின்களிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.  முந்தைய ரக காரைக் காட்டிலும் இக்கார் 70 கிலோ வரை குறைவான எடை கொண்டது.

2017, 5 சீரிஸ் காரில் 18 இஞ்ச் அலாய் வீல்கள், 10.25 இஞ்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, ரிமோட்டுடன் கூடிய ஐ-டிரைவ் கண்ட்ரோலர், 16 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் ஆகியவை உள்ளன.

இதேபோல புதிய 5 சீரிஸ் காரில் 6 ஏர் பேக்குகள், ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 10.2 இஞ்ச் பின்பக்க டிஸ்பிளே மானிட்டர்கள், வாய்ஸ் கண்ட்ரோல், கெயிஸ்ஷர் கண்ட்ரோல், மல்டி ஃசோன் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட சகல வசதிகளை கொண்டுள்ளது. இக்காரின் கடைசிகட்ட அசெம்பிள் பணிகள் சென்னையில்தான் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close