[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
 • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 12,000 கனஅடியில் இருந்து 11,000 கனஅடியாக குறைந்தது
 • BREAKING-NEWS தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னை நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது
 • BREAKING-NEWS சென்னை : பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
 • BREAKING-NEWS 68சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் நவ.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது
 • BREAKING-NEWS இமாச்சலபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
 • BREAKING-NEWS சங்கரன் கோவிலில் பிவிசி பைப் கிடங்கில் தீ விபத்து; தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு
வணிகம் 26 Jun, 2017 05:56 PM

ஜிஎஸ்டி வரிவிதிப்பு: ஆன்லைன் ஷாப்பிங் எப்படி இருக்கும்?

gst-s-effect-on-online-shopping

ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலானால் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கப்படும் பொருட்களின் விலை உயரும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

 சுதந்திரத்துக்கு பிறகான நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறை நாடு முழுவதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலாக இருக்கிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலாக இருப்பதால் இணையதள வணிக நிறுவனங்கள், பொருட்களை விற்றுத் தீர்ப்பதற்காக 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலான சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலானால் ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களின் விலை உயர வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். 

ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இதுவரை எந்தவிதமான வரிகளையும் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்களுக்கு ஒரு சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடைமுறை அமலாகும்போது ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களின் விலை உயரும் என்பதில் மாற்றமில்லை. 

அதேநேரம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலானால் ஆன்லைனில் நீங்கள் வாங்கும் பொருட்கள் விரைவாக உங்கள் வீட்டை வந்தடையும். ஏனெனில், இந்த புதிய வரிவிதிப்பின் கீழ் மாநிலத்துக்கு மாநிலம் வரிவிதிப்பு வேறுபடாது. பொருட்களை விற்பவர்கள் மாநில வரி விதிப்புக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. உதாரணமாக, சென்னையில் வசிக்கும் ஒருவர் பெங்களூருவில் இருந்து செயல்படும் ஒரு நிறுவனத்தின் பொருளை ஆன்லைன் மூலம் வாங்கினால், பொருளை விற்பவர் இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக வரி விதிப்பு விதிமுறைகளுக்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இதனால் காலதாமதமின்றி பொருட்கள் விரைவாக டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் மெகா ஆஃபர்கள் மற்றும் இலவச அறிவிப்புகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பதால், அதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தயக்கம் காட்டலாம். அமேசான் மற்றும் இ-பே போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு கரன்சிகளையே ஆன்லைன் ஷாப்பிங் பணபரிமாற்றத்தின் போது பயன்படுத்துகின்றன. இந்த நடைமுறைக்கு விதிக்கப்படும் வரி விதிப்பு குறித்து அரசிடம் தெளிவான விளக்கங்கள் இல்லை.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close