[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது: நடிகர் சங்கம்
  • BREAKING-NEWS மெர்சலில் சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்: தமிழிசை
  • BREAKING-NEWS சென்சார் செய்த படத்தை திரும்ப சென்சார் செய்ய வாய்ப்பில்லை: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை: இயக்குநர் சீனு ராமசாமி
  • BREAKING-NEWS மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளை சொன்ன விஜய்க்கு பாராட்டு: விஷால்
  • BREAKING-NEWS பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
வணிகம் 02 Mar, 2017 07:18 AM

பண பரிவர்த்தனைகளுக்கு ரூ.150 கட்டணம்: தனியார் வங்கிகள் அதிரடி

hdfc-icici-axis-to-charge-at-least-rs-150-after-four-free-transactions-a-month

மாதம் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ஹெச்டிஎப்சி, ஐசிஜசிஜி, ஆக்சிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகள் நடைமுறைப்படுத்தியுள்ளன.

ஒரு மாதத்தில் வங்கி கிளைகளில் நான்கு முறைக்கு மேல் பணம் டெபாசி‌ட் செய்வதற்கும், எடுப்பதற்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என ஹெச்டிஎப்சி அறிவித்துள்ளது. இந்த கட்டணங்கள் சேமிப்பு கணக்கு மற்றும் வங்கி சம்பள கணக்குகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருக்கும் கிளை தவிர மற்ற கிளைகளில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என ஹெச்டிஎஃப்சி அறிவித்துள்ளது. இந்த கட்டணம் வங்கி கிளைகளில் நடத்தப்படு‌ம் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு முன்பு இருந்த கட்டணங்களே பொருந்தும் என்றும் ஹெச்டிஎப்சி தெரிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் முதல் நா‌ன்கு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அதன் பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. ‌இவ்வாறு வசூலிக்க‌ப்படும் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.150ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியை பொறுத்தவரை முதல் ஐந்து‌ பரிவர்த்தனைகளுக்‌கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும்‌ ‌அதன் பின்னர் ஆயிரம் ரூ‌பாய்க்கு ரூ.5 என்ற விகிதத்தில் கட்டண‌ம்‌ வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுபோல் கட்டணம் வசூலிக்க அரசிடமிருந்து தங்களுக்கு உத்தரவு ஏதும் வரவில்லை என பொதுத்துறை வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close