[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ரூபாய் நோட்டு விவகாரம்... இருபது நாட்களுக்குப் பிறகு மவுனம் கலைத்த ரிசர்வ் வங்கி ஆளுநர்

rbi-taking-all-steps-to-ease-genuine-pain-of-honest-citizens-governor-urjit-patel

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணிகள் துரிதமாக நடைபெற்ற வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்தார்.

ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 20 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள அவர், நேர்மையானவர்கள் இன்னல்களைச் சந்திக்காத வகையில் ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கி கணக்கில் பணம் இருப்பு அதிகரித்துள்ளதாகவும், பணம் தேவைப்படும் போது முடிந்தவரை டெபிட் கார்டைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பணத்தின் இருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும் வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதுமுள்ள ஏடிஎம் இயந்திரங்களை புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப மறுசீரமைக்க 40 முதல் 50 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிஓஎஸ் இயந்திரங்களின் பயன்பாடுகளை அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close