[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

புதிய 1000 ரூபாய் நோட்டுகள் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை.. அருண் ஜேட்லி

atms-on-a-war-effort-are-being-recalibrated-arun-jaitley

நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து பேசிய ஜேட்லி, இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று தெரிவித்தார். வங்கி ஊழியர்களைப் பாராட்டுவதாகத் தெரிவித்த ஜேட்லி, கடந்த 7 நாட்களில் கோடிக்கணக்கான ரூபாய் பணவரித்தனைகளை அவர்கள் கையாண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக பேசிய ஜேட்லி, புதிய ரூ.1,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், புதிய ரூபாய் நோட்டுகளை வைக்க வசதியாக 22,500 ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனிடையே, போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close