[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஆன்லைனில் ஏலத்துக்கு வந்த ரூ.2,000 நோட்டுகள்... ரூ.1.5 லட்சம் வரை விலை நிர்ணயம்?

pay-rs-1-51-lakh-to-fetch-2000-rupee-notes-on-ebay

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ரூ.2,000 நோட்டுகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் குவிந்த மக்கள், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஈபே இணையதளம் மூலம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக இஸ்லாமியர்களின் புனித எண்ணாகக் கருதப்படும் 786 என்ற வரிசை எண்ணுடன் தொடங்கும் ஐந்து புதிய ரூ.2,000 நோட்டுகளை ரூ.1.51 லட்சத்திற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்றும் தெரிகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஈபே நிறுவனம், தனிப்பட்ட விற்பனையாளர்கள் விற்பதற்காகப் பட்டியலிடும் பொருட்களைக் கட்டுப்பட்டுத்துவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. அதேநேரம் புதிய ரூ.2,000 நோட்டுகள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படவில்லை என்றும் ஈபே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்வதாக ஈபே உள்ளிட்டை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு ஜூலையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close