[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

விஜய் மல்லையா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா?

india-expects-early-extradition-of-vijay-mallya-after-may-modi-talks

பொதுத்துறை வங்கிகளில் 9000 கோடிக்கு மேல் கடனை பெற்றுக்கொண்ட திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டன் சென்ற விஜய் மல்லையா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார், திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா - பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள இரு நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அவர்களின் சொந்த நாட்டு அரசிடம் ஒப்படைப்பது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்கத்தின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,

’ வர்த்தம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா - பிரிட்டன் நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் குற்றவாளிகளை வெளியேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பிரிட்டனில் தலைமறைவாகியிருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து மோடியும், தெரசா மேவும் நீண்டநேரம் ஆலோசித்தனர். அப்போது, இரு நாடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் குற்றவாளிகளை அந்தந்த நாட்டு அரசுகளிடம் ஒப்படைப்பது தொடர்பான ‘பரஸ்பர சட்டப்பூர்வ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை’ முழுவீச்சில் செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close