[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

தீபாவளி முதல் ரோமிங் கட்டணம் ரத்து..வோடஃபோன் அறிவிப்பு

vodafone-will-offer-free-national-roaming-starting-this-diwali

தேசிய அளவிலான ரோமிங் கட்டணங்களை தீபாவளி முதல் ரத்து செய்வதாக வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொலைதொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த சலுகை அறிவிப்பில் வோடஃபோன் நிறுவனம் தற்போது இணைந்துள்ளது. தீபாவளி முதல் தேசிய அளவில் இன்கமிங் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டது என வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வோடஃபோன் நிறுவன வர்த்தக பிரிவு இயக்குனர் சந்தீப் கட்டாரியா கூறுகையில், ‘வோடபோனில் தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வசூலிக்கப்படமாட்டது. இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும், இன்கமிங் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது. மேலும் அவுட்கோயிங் கால்களுக்கும் இனி மிகக்குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close