[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தாமாக முன்வந்து தெரியப்படுத்தும் திட்டம்: ரூ.65,250 கோடி கருப்பு பணம் மீட்பு

black-money-worth-rs-65250-crore-disclosed-under-income-declaration-scheme-arun-jaitley

கருப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரியப்படுத்தும் திட்டத்தின் கீழ், 65,250 கோடி ரூபாய் கருப்புப் பணம் அரசுக்கு தெரியவந்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கருப்பு பண ஒழிப்பில் கூடுதல் அக்கறையும், கவனமும் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு 4 மாத கால அவகாச திட்டம் ஒன்றை அறிவித்தது. அதன்படி, கருப்பு பணம் மற்றும் சொத்துகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் அதுபற்றிய விவரங்களை வருமான வரித்துறையிடம் ஒரே முறை, தாமாக முன்வந்து தெரிவித்து, வரி, அபராதம் என மொத்தம் 45 சதவீத அளவுக்கு செலுத்தி, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பி, நிவாரணம் பெறலாம் என தெரிவித்திருந்தது.

ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை இந்த திட்டம் 4 மாதங்கள் அமலில் இருந்தது. இந்த திட்டத்தின் கீழ் கணக்கு காட்டுபவர்கள் பெயர்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 65,250 கோடி ரூபாய் கருப்புப் பணம் அரசுக்கு தெரிய வந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரியாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close