[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

ஜியோவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் பிஎஸ்என்எல்: இலவச அழைப்புகளுடன் டேட்டா கட்டணங்களையும் குறைக்கத் திட்டம்

bsnl-plans-free-voice-cheaper-package-than-jio

ரிலையன்ஸ் ஜியோவுக்குப் போட்டியாக இலவச தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறைவான டேட்டா கட்டணங்களுடன் புதிய திட்டங்களை அறிவிக்க அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசிய அந்தநிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், ஜியோ நிறுவனம் போல் இல்லாமல் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்களுக்கும் இலவச திட்டங்களை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேபோல, வரும் 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆயுட்கால இலவச அழைப்புகளுடனான திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பிஎஸ்என்எல் செல்போன் சேவையையும், பிராட்பேண்ட் சேவையையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளதாகவும் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

பிஎஸ்என்எல் இந்த முடிவால் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் பல்வேறு வசதிகளுக்கான கட்டணங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் என்று தொலைதொடர்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close