[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

வடகிழக்கு மாநிலங்களில் பலமாக கால்பதித்த பாஜக 

bjp-gets-18-out-of-25-lok-sabha-seats-in-northeast

மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 தொகுதிகளில் 18-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்து  பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் இக்கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா தவிர்த்து இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக வட மாநிலங்கள் பாஜகவுக்கு கைகொடுத்துள்ளன.

ஹரியானா, உத்திரப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக முழு வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமாக பாஜக தலைமையிலான கூட்டணி 49% வாக்குகளை தன்வசப்படுத்தியுள்ளது. தொங்கு நாடாளுமன்றம் வரும், மூன்றாவது அணி உருவாகும் எனப் பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தனிக்கட்சியாக பாஜக மட்டுமே 303 தொகுதிகளை கைப்பற்றி தன் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டது.

வட மாநிலங்களில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 தொகுதிகளில் 18-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அசாமில் 9 தொகுதிகள், அருணாசலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 2 தொகுதிகள், மேகலாயா, மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடிமக்கள் திருத்த மசோதா வடகிழக்கு மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வேலை செய்யும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால் குடிமக்கள் திருத்த மசோதா , மாட்டிறைச்சி, உட்கட்சி பூசலால் பாஜக தலைவர்கள் கட்சி மாறியது உள்ளிட்ட பல பிரச்னைகள் எதிரே இருந்த போதிலும் சரியான காய் நகர்த்தல் மூலம் பாஜக வடகிழக்கு மாநிலங்களில் பலமாக கால்பதித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close