[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

“செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி”- முதலமைச்சர் விமர்சனம்

senthi-balaji-is-political-dealer-cm-palanisamy

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்படடட வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், புன்னம் சத்திரம், தென்னிலை சின்னதாராபுரம் மற்றும் எல்லமேடு ஆகிய இடங்களில் வேனில் இருந்தவாறு அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மதிமுக, அதிமுக உள்பட இதுவரை 5 கட்சிகளுக்கு தாவியர் என விமர்சித்தார். தம்மை அமைச்சராக்கிய கட்சிக்கே துரோகம் இழைத்த செந்தில்பாலாஜி, மக்களுக்கு எப்படி நன்மை செய்வார் என கேள்வி எழுப்பிய அவர், ஆளுங்கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் மட்டுமே மக்களின் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்றார். செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்றும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close