தமிழகம், புதுச்சேரி, கர்நாடக உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.84 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 38 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி மற்றும் மகராஷ்டிராவில் 10 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், அசாம், பீகார் மற்றும் ஒடிஷாவில் தலா 5 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகளிலும், கஷ்மீரில் இரண்டு தொகுதிகளிலும் மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றது. இது தவிர தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், ஒடிஷாவில் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் நேற்று நடைபெற்றன.
இந்நிலையில், 95 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.84 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சமாக காஷ்மீரில் 43.4 சதவிகித வாக்குகளும், அதிகபட்சமாக புதுச்சேரியில் 81 புள்ளி 57 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம், மேற்கு வங்கம், அஸாம், மனிப்பூர், சத்தீஸ்கர், ஆகிய மாநிலங்கள் 70 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குப்பதிவை கண்டதாக கூறப்பட்டுள்ளது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்