[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

விதவிதமான வீடியோ பிரச்சாரம் - வலுக்கும் அதிமுக V/s திமுக வலைத்தள யுத்தம்

admk-dmk-online-campaign

மக்களவைத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் அதிமுக, திமுக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. காலை முதலே தெரு தெருவாக வாக்கு கேட்கும் வாக்காளர்கள் மாலை வரை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாத மக்கள், தலைவர்களின் பேச்சை கூட்டமாக நின்று கேட்கின்றனர். இது ஒருபுறம் இருக்க டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதிமுக, திமுக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக சார்பில் பல்வேறு வீடியோக்கள் வெளியிடப்பட்டு, மக்களிடம் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்கப்பட்டு வருகிறது. திமுக சார்பில் வெளியிடப்படும் வீடியோக்கள் பலவும், அதிமுகவை குறைகூறும் விதமாக உள்ளது. ‘ஆதிக்கவாதிகளும் வேண்டாம்! அடிமைகளும் வேண்டாம்! #தமிழ்மானம்காப்போம்’ என்ற மையக்கருத்துடன் திமுகவின் அனைத்து வீடியோக்களும் வெளியிடப்படுகின்றன.

“இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தராமல், நடுத்தெருவில் அலையவிடும் அரசு இனியும் எதற்கு?”, “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி!” என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை அடக்கி அந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன. திமுகவின் ‘ஐடி விங்’ இதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறது.

இதற்குப் போட்டியாக அதிமுகவும் டிஜிட்டலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான பணிகளில் அதிமுக ஐடி விங் ஈடுபட்டுள்ளது. “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. #SayNoToDMK   #திமுகவிற்குவாக்களிக்காதீங்க” என்று அதிமுகவும் வீடியோ வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது உள்ளிட்டவைகளை சாதனைகளாகவும் அதிமுக வீடியோ வெளியிட்டுள்ளது. அதிமுக, திமுக தொண்டர்கள் இந்த வீடியோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் ஊடகங்கள் வழியாகவும் அந்த வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் அரசியல் களம் மிகவும் சூடு பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close