[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

இன்று வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை

bjp-election-manifesto-is-release-today-11-am

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

17-ஆவது மக்களவைக்கான தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 2 நாட்‌கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சி தனது  தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில், வளர்ச்சி, தேசியம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

Image result for பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை

5 ஆண்டுகால ஆட்சியில் பாஜக வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை அடுத்து, இந்த முறை வேலைவாய்ப்புகளை உருவாக்க தனி அமைச்சகம், 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பாஜக அடிப்படை வாக்குகளை மனதில் வைத்து அயோத்தியா, காசி மற்றும் மதுரா போன்ற ஆன்மிக தலங்களுக்காக சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகலாம் என கூறப்படுகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சி கடந்த 2-ஆம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. ஏழைகளுக்கு ஆண்டுக்கு ‌72 ஆயிரம் ரூபாய் தருவது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close