[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா ஒரு கண்துடைப்பு ”- கமல்ஹாசன்

kamal-hassan-criticized-both-governments

தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா ஒரு கண்துடைப்பு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் சிறு தவறு நடந்திருந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் தைரியம் தங்களுக்கு உண்டு எனக் கூறினார்.

மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்காத ஆட்சி அகற்றப்பட வேண்டாமா எனக் கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், பல திட்டங்களை செய்வதாகக் கூறி தங்களது தேவையை பூர்த்தி செய்கிறார்கள் என விமர்சித்தார். மற்ற கட்சிகள் அதிக அளவு செய்கிறார்கள் என வருந்த வேண்டாம் எனக் கூறிய அவர், நமது செலவு ரத்தமும், வியர்வையுமே என்றும் தமிழகமே தமது இலக்கு எனத் தெரிவித்தார்.

தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற்று, தொகுதிக்கு பணிகள் மேற்கொள்ளவில்லை என்றால் அவர் பதவியை ராஜினாமா செய்வார் என கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close