[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

final-tamil-nadu-candidates-list-to-be-out-today

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் தேதி முதல் தொடங்கி 26 ஆம் தேதி மாலை 3 மணியுடன் நடைபெற்றது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், அமமுக வேட்பாளர்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட ஆயிரத்து 587 வேட்புமனுக்களில், 932 மனுக்கள் ‌ஏற்கப்பட்டன. 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 518 வேட்புமனுக்‌கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததில், 305 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

213 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close