[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்

தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை - உயர்நீதிமன்றம்

can-not-allot-cycle-symbol-for-tmc-in-tanjore-consitutency-chennai-high-court

தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி.வி.நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார் "தமிழ் மாநில காங்கிரஸ்” என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பின்னர் திமுக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 39 தொகுதிகளிலும், 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களில் வென்றது. அதேபோல மக்களவை தொகுதிகளிலும் வெற்றிகண்டது. இந்த தேர்தல்களில் போட்டியிட்டபோது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.

பின்னர் 2001-ல் மூப்பனாரின் மறைந்தபின், அவரது மகன் ஜி.கே.வாசன் தமாகா-வை 2002-ல் இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்தார். மத்திய அமைச்சராக பதவிவகித்த நிலையில், 2014 காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். காங்கிரசுக்கு சென்ற எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.-க்கள் மீண்டும் தன்னுடன் திரும்பிவிட்டதால்  சைக்கிள் சின்னத்தையே தங்கள் கட்சிக்கான நிரந்தர சின்னமாக வழங்க தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலும் 2016-ஆம் ஆண்டிலிருந்து போராடி வருகிறார்.

இந்நிலையில், சின்னங்களுக்கான விதிகள் 10 (பி)-யின்படி மக்களவைத் தேர்தலில் மட்டும் சைக்கிள் சின்னத்தை பயன்படுத்த தமாகாவிற்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது. ஆனால் சைக்கிள் சின்னைத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார். அதில் தஞ்சை தொகுதியில் மட்டுமே போட்டியிடும் தங்களுக்கு சைக்கிள் சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும், வேறு யாருக்கும் சைக்கிள் சின்னத்தை ஒதுக்க கூடாது எனவும் இடைக்கால கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சின்னங்களுக்கான விதிகள் 10(பி)-யின்படி, ஒரு தொகுதிக்கு மேற்பட்டு போட்டியிட்டால் தான் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியுமெனவும், அதேசமயம் வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என உரிமை கோர முடியாது எனவும் வாதிடப்பட்டது.

அப்போது தமாகா தரப்பில் யாருக்கும் ஒதுக்கக்கூடாது என்ற இடைக்கால மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அதேசமயம் தஞ்சாவூர் தொகுதிக்கு மட்டும் சைக்கிள் சின்னத்தை ஒதுக்க ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தஞ்சாவூர் தொகுதிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டுமென்ற இடைக்கால கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நிரந்தரமாக சைக்கிள் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்பது விரிவான கோரிக்கை என்பதால், அதில் அவசரமாக முடிவெடுக்க முடியாது என கூறி ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும் தமாகா வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close