[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
கல்வி & வேலைவாய்ப்பு 04 Aug, 2016 09:38 PM

201‌3க்கு பிறகு நடத்தப்படாத ஆசியர் தகுதித் தேர்வு.... பாதிக்கப்படும் ஆசிரியர்கள்.....

teacher-eligibility-test-issue

கட்டா‌யக் கல்வி உரிமை சட்டத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் இரு முறை நடத்தப்படவேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழகத்தில் 2013க்கு‌ பிறகு நடத்தப்படவே இல்லை. இதற்குக் காரணம் என்ன? இதனால்‌ ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஆசிரியர் தகுதித் தேர்வு முறை கடந்த 2012ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான ஆசிரியர்களை வழங்க வேண்டும் என்பதே நோக்கம் எனக் கூறி தகுதி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டு தளர்வை முதலில் மறுத்த தமிழக அரசு, பிறகு 5% சதவீத தளர்வை வழங்கியது. தகுதித் தேர்வு அமல்படுத்தப்பட்ட உடனேயே அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தனியார் பள்ளிகளில் பணிபுரிய வழங்கப்பட்ட கெடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதியோடு முடிந்துவிட்டது

அதிகமான வழக்குகளை சந்தித்த விவகாரங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வும் ஒன்று. ஆசிரியர்‌ தகுதித் தேர்வே வேண்டாம், தகுதி மதிப்பெண்ணில் இடஒதுக்கீடு வேண்டும், இடஒதுக்கீடு கூடாது, வெயிட்டேஜ் முறை வேண்டாம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வழக்குகள் தொடுக்கப்பட்டன.‌ தகுதித் தேர்வு தாமதமாவது குறித்து‌கேட்கும் போதெல்லாம் அரசுத் தரப்பில் இந்த வழக்குகளே காரணமாக சொல்லப்படுகின்‌றன. ‌பணி நிரவல்கள் மூலம் ஆசிரியர் காலியிடங்களை சமாளிக்க முடிந்தாலும் அது சமாளிப்பாகவே இருக்கும் என்பது துறை சார்ந்தவர்களின் கருத்து

உச்சநீதிமன்றத்தில் கிட்டத்தட்ட ஒராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில், தமிழக அரசின் மனுவும் அடங்கும். வழக்கைக் காரணம் காட்டி தகுதித் தேர்வை மேலும் தாமதப்படுத்தாமல் அவற்றை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது‌ அவசி‌யம். இவற்றின் எதிரொலியாகவே ஆசிரியர் துறை சார்ந்த கல்வியை பயில முன்வரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்திருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close