[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

இந்திய கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

join-indian-navy-as-a-sailor-10th-passed-male-candidates-can-apply

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய Sailor எனப்படும் மாலுமி பணிக்கான MR(Matric Recruit) அக்டோபர் - 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: மாலுமி

மெட்ரிக் ரெக்ரூட் - Matric Recruit (MR)

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 400 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 23.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.11.2019 (நாளை)

வயது வரம்பு: 

விண்ணப்பிக்க விரும்புவோர் 01.10.2000 மற்றும் 30.09.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.215

குறிப்பு: 
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
2. ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும். 

கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மெட்ரிகுலேசன் அல்லது 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://www.joinindiannavy.gov.in/ (அல்லது) https://www.joinindiannavy.gov.in/en/account/login- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: 

1. கணினி வழித்தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. மருத்துவ தகுதி தேர்வு

ஊக்கத்தொகை:

தொடக்கக்கால பயிற்சியின் போது ரூ.14,600 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி முடிவுக்கு பின் பல்வேறு சலுகைகளும், திறமைக்கேற்ற பணியும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற, https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1574147749_416806.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close