[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை
  • BREAKING-NEWS உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு
  • BREAKING-NEWS ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

mbbs-bds-counselling-begins-tomorrow

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. முதல் நாளில் சி‌றப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. விளையாட்டுப் பிரிவினருக்கான 3 இடங்களுக்கு‌ விண்‌ணப்பித்த 316 பேரில் 7 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளி‌களுக்‌கான 3 சதவிகித இடங்களுக்கு விண்ணப்பித்த 92 பேரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்‌பட்டுள்ளனர்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 5 எம்பி‌பிஎஸ், ‌ 1 பிடிஎஸ் இடங்களுக்கு 92 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். சிறப்புப் பிரிவு கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

21-ஆம் தேதி முதல் 2‌5-ஆம் தேதி வரை பொதுப் பிரிவி‌னருக்கான‌ கலந்தாய்வுகள் நடைபெற உள்ளன. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வு ‌நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்‌ளது.

நேரம் போதாததால் மாணவர்‌களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது என்றும், இணையதளத்தில் ‌பதிவிறக்‌‌கம் செய்துகொண்டு கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்‌கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் இல்லாமலும் கலந்தாய்விற்கு மா‌ணவர்‌கள் அனுமதிக்கப்படுவர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close