[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தால் என்ன நடக்கும்?

neet-withdraw-selection-of-tamil-nadu

நீட் தேர்வு சர்ச்சை நீடித்துக் கொண்டே இருக்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்விலிருந்து மோடி விலக்கு அளிப்பார் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டால் விண்ணப்ப நடைமுறைகளை மீண்டும் தொடங்க வேண்டும். மருத்துவக் கலந்தாய்வு மேலும் தாமதமாகலாம். நீட் மூலம் இடம் கிடைக்கும் என நினைத்த மாணவர்கள் ஏமாற்றமடையலாம். இது போன்று ஒருசில பிரச்னைகள் இருந்தாலும், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புற ஏழை மாணவர்களும், பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயனடைவார்கள். நீட் தேர்வு மூலம் வாய்ப்பு கிடைக்காமல் பிற பாடங்களில் சேர்ந்து தங்களுடைய கனவுகளைத் தொலைத்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close