[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு நாளை நடக்கிறது.. மின்னணு சாதனங்களுக்கு தடை

tnpsc-group-4-exam-held-on-tomarrow

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 301 மையங்களில் நாளை நடைபெற உள்ளது.

இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 5,451 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நாளை (நவம்பர் 6) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறாதவர்கள் www.tnpsc.com என்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணத்தையும் மேற்கண்ட இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு பணிகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில், சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தில் மொபைல் போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு முன்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளைக் கவனமாகப் படித்து விட்டு தேர்வறைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close