[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • BREAKING-NEWS நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்

கலை அறிவியல் கல்லூரிகளிலும் விமான பராமரிப்பு பாடம்: யூஜிசி புதிய திட்டம்

if-all-goes-well-regular-bsc-students-can-learn-aircraft-maintenance

விமானப் பராமரிப்பு (aircraft maintenance) பாடத்தை இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்களும் பயிலும் வண்ணம் புதிய திட்டத்தினை பல்கலைக்கழக மானியக்குழுவான யூஜிசி வகுத்துள்ளது.

நாடு முழுவதும் விமானப் பராமரிப்பு பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும் நிலையில், இந்த துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருக்கிறது. இந்த பற்றாக்குறையைப் போக்கும் வகையில் கல்லூரிகளில் விமான பராமரிப்புப் பாடத்தினை கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை அளவிலான படிப்பாக உருவாக்குவது குறித்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களிடம் யூஜிசி கருத்து கேட்டுள்ளது.

யூஜிசி-யின் இந்த அறிவிப்புக்கு பல்கலைக்கழகங்கள் ஆதரவான கருத்தைத் தெரிவிக்கும் நிலையில் இந்த பாடத்திட்டம் அமலாகும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக யூஜிசி அமைப்பின் தலைவர் ஜஸ்பால் எஸ்.சாந்து விடுத்துள்ள அறிவிப்பில், விமானப் பராமரிப்பு துறையில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் பற்றாக்குறையைப் போக்குவது குறித்து உயர்கல்வி அமைப்புகள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்று தெரிவித்துள்ளார். மேலும், விமான பராமரிப்பு பாடத்துக்கான இளங்கலை பட்ட வரைவு பாடத்திட்டத்தினையும் அனுப்பி பல்கலைக்கழகங்களிடம் யூஜிசி கருத்து கேட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close