[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
 • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
 • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
 • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
கல்வி & வேலைவாய்ப்பு 04 Sep, 2016 07:04 PM

மாணவர்கள் தேர்வு செய்யும் சிறந்த பல்கலைகழகம் எஸ்.ஆர்.எம்... சேர்க்கை பிரிவு இணை இயக்குனர் டி.வி. கோபால்

srm-is-a-best-university-t-v-gobal

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக் கழகங்களை தேர்வு செய்யும் கலந்தாய்வு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், தலைசிறந்த பல்கலைக் கழகங்களுள் ஒன்றான எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் பயில்வதற்கு மொத்தம் 2 ஆயிரத்து 498 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் கலந்தாய்வு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வானவர்களுக்கு சேர்க்கைக்கான உறுதிச் சான்றதழ் வழங்கப்பட்டது.

கல்வி பயில்வதற்கு மற்ற இடங்களை விட தென் மாநிலங்கள்தான் ஏதுவானது என்றும், அனைத்து வசதிகளையும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் கொண்டுள்ளதாகவும் சொல்கிறார் எஸ்.ஆர்‌.எம் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவர் யோகேஷ்.

‘எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளன என்பதை நேரில் அறிந்தேன். இந்தியாவில் உள்ள தலை சிறந்த தனியார் பல்கலைக்கழகங்களுள் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகமும் ஒன்று. எனவேதான் மற்ற கல்வி, பல்கலைக்கழகங்களை விட எனது கல்விக்கு எஸ்.ஆர்.எம்-யை தேர்வு செய்தேன் கல்வி பயில விரும்பினால் தென் மாநிலங்களுக்கு செல் என்று என் பெற்றோர் அறிவுறுத்தினர். நாட்டின் மற்ற நகரங்களைவிட தென் மாநில நகரங்கள்தான் கல்வி பயில்வதற்கு ஏதுவாக உள்ளன’ எனக் கூறினார் யோகேஷ்.

தங்களது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்ட பெற்றோரும் கலந்தாய்வு கூட்டத்திற்கு வந்திருந்தனர். கடும் போட்டிகளை கொண்டதாக மருத்துவ உலகம் மாறிவிட்டதென்று தெரிவித்த அவர்கள், அவை அத்தனையையும் சமாளிக்கும் வகையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளதாக கூறினர்.

கடினமான தேர்வாக கருதப்படும் நீட் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களே எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தை தேர்வு செய்திருப்பதாக கூறுகிறார் மாணவர் சேர்க்கை பிரிவின் இணை இயக்குனர் டி.வி. கோபால்.

நாடு முழுவதும் கடந்த 2ம் தேதி நடைபெற்ற வேலை நிறுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் அனைத்து மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்காக வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close