[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

வேலூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை: ஏடிஎம் கொள்ளையை அடுத்து நடவடிக்கை

severe-monitoring-in-vellore-district

வேலூரில் இருவேறு ஏ.டி.எம்.களில் நடந்த கொள்ளையை அடுத்து மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திலும், காட்பாடி அடுத்த சில்க்மில் பகுதியில் உள்ள ஏடி.எம் மையத்திலும் சுமார் 9 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கொள்ளைச் சம்பவங்களிலும் வெல்டிங் மூலம் இயந்திரம் வெட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டிலும் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையரின் முகமும், கைரேகைகளும் பதிவாகவில்லை என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து புதியதலைமுறை நடத்திய கள ஆய்வில் 50-ல் 3 ஏ.டி.எம் களில் மட்டுமே இரவுக் காவலாளிகள் இருப்பதும், ஏ.டி.எம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் சில தினங்களுக்கு முன் சேலத்தில் இருந்து சென்னை சென்ற இரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட போதும் இதேபோல் கேஸ் வெல்டிங் கட்டர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close