[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

மேயரை தேர்ந்தெடுக்கும் புதியமுறைக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

chennai-high-court-notice-tn-govt

மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்கும் புதியமுறைக்கு எதிராக பாமக நிர்வாகி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் குளுவாடி ஜி.ரமேஷ், எம்.வி முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேயர் தேர்வு முறை தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு, வரும் 19ம் தேதிக்கு விசாரனைக்கு வருவதாகவும், ‌அதனுடன் சேர்த்து விசாரிக்கலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். அதனை ஏற்ற நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மாநகராட்சி மேயரை, உறுப்பினர்களே தேர்வுசெய்யும் வகையில் அண்மையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close