[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

கோயில் வழிபாடு தொடர்பான பிரச்னை: சிலம்பூர் கிராமத்தில் 30 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

144-ordered-for-30-days-in-silambur-village

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில், கோயில் வழிபாடு தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் 30 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலம்பூர் கிராமத்தில், அய்யனார் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் அந்த கோயில் ஓராண்டாக மூடப்பட்டிருந்தது. தற்போது ஆடி மாதம் தொடங்கியதையடுத்து அந்த கோயில் திறக்கப்பட்டது.

கோயில் திறக்கப்பட்டதிலிருந்தே வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி வந்தது. பிரச்னை பெரிதாக உருவெடுக்கும் முன், அய்யனார் கோயிலுக்கு சீல் வைக்க ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் திருமாறன் உத்தரவிட்டார். மேலும் சிலம்பூர் கிராமத்தில் 30 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close