[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

5 நாட்களாக தொடர்ந்த நாகை,ராமநாதபுரம் விசைப்படகு மீனவர்களின் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் வாபஸ்

nagai-fishermen-protest-withdrowal-after-meeting-with-collector

கடந்த 5 நாட்களாக தொடர்ந்த நாகை,ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் மீனவர்களின் படகுகளை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக,இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் சிறையிலுள்ள 6 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர்.

முன்னதாக, இது தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டம், தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நலச்சங்க மாநில செயலாளர் என்.ஜே. போஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில், மீனவர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close